தலச்சிறப்பு |
சிவபெருமானை வழிபடும் பெண் ஒருத்தி திருமணமாகி கணவன் வீட்டிற்கு சென்றபோது அங்கு தடை ஏற்பட்டது. அதனால் கன்றுக்குட்டியை கட்டி வைக்கும் ஆப்பையே சிவலிங்கமாக வழிபட்டார். இதைக் கண்ட அவள் கணவன் கோடாரியால் அந்த ஆப்பை வெட்ட, சுவாமி வெளிப்பட்டு அருளிய தலமாதலால் கன்றாப்பூர் என்றும் பெயர் பெற்றது. நடுதறியில் இருந்து தோன்றியதால் மூலவர் 'நடுதறிநாதர்' என்ற பெயர் பெற்றார்.
மூலவர் 'நடுதறியப்பர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். கோடாரி வெட்டிய தழும்பு சுவாமி சிரசின் மீது உள்ளது. அம்பிகை 'மாதுமையம்மை' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள்.
பிரகாரத்தில் மூல விநாயகர், தருண கணபதி, சித்தி கணபதி, புத்தி கணபதி, முக்தி கணபதி, பால கணபதி என ஆறு விநாயகர் உள்ளனர். அடுத்து ஜேஸ்டா தேவி, அய்யனார், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், நவக்கிரகங்கள், பைரவர், சனி பகவான், சூரியன், சந்திரன் ஆகிய சன்னதிகள் உள்ளன.
இடும்பன் என்னும் அரக்கன் வழிபட்ட தலம்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|